சட்டப் பரபரப்புப் புனைவு

சட்டப் பரபரப்புப் புனைவு (Legal thriller) என்பது ஒரு வகைப் புனைவுப் பாணி. குற்றப் புனைவு மற்றும் பரபரப்புப் புனைவு பாணிகளின் உட்பிரிவாக உள்ளது. இவ்வகைப் படைப்புகள் வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் போன்ற சட்டம் சார் நபர்களை மையக் கதைமாந்தராகக் கொண்டுள்ளன. சட்டம்-நீதி அமைப்பும் சமூகத்துடனான அதன் உறவும் இவற்றில் மையக்கருத்துகளாக அமைகின்றன. ”தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றப் போராடும் வழக்கறிஞர்கள்” எனும் கதை முடிச்சே இவ்வகைப் படைப்புகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ரிச்சர்ட் நார்த் பாட்டர்சன், ஜான் கிரிஷாம், இயர்ல் ஸ்டான்லி கார்டனர், மைக்கேல் கானலி ஆகியோர் இவ்வகைப் புனைவுப் பாணியில் எழுதும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் சிலர்.

🔥 Top keywords: காமராசர்ஆட்சி மொழிஆட்சித் தமிழ்சிறப்பு:Searchமுதற் பக்கம்மு. கருணாநிதிசுப்பிரமணிய பாரதிதமிழ்சுற்றுலாதிருக்குறள்பாரதிதாசன்ஏ. நேசமணிகா. ந. அண்ணாதுரைதமிழ்நாடுசிலப்பதிகாரம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்இந்தியாவில் சுற்றுலாத்துறைதமிழ்த்தாய் வாழ்த்துஇந்திய அரசியலமைப்புபயண இலக்கியம்ஈ. வெ. இராமசாமிதொல்காப்பியம்தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிபத்துப்பாட்டுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆண் தமிழ்ப் பெயர்கள்முருகன்அசுவத்தாமன்அறுபடைவீடுகள்