எசுப்பானியாவின் மாநிலங்கள்

எசுப்பானியாவும் தன்னாட்சி பெற்ற பகுதிகளும் ஐம்பது மாநிலங்களாக (எசுப்பானியம்: provincias, IPA: [pɾoˈβinθjas]; ஒருமை provincia) பிரிக்கப்பட்டுள்ளன. 1833இல் ஏற்படுத்தப்பட்ட நிலப்பிரிவுகளை ஒட்டியே இந்த மாநிலப்பிரிவுகள் அமைந்துள்ளன; ஒரே மாற்றமாக கேனரி தீவுகள் தற்போது இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வரலாற்றின் பெரும்பகுதிக்கும் மையப்படுத்தப்பட்ட ஆளுமையைக் கொண்டிருந்த எசுப்பானியாவில் இந்த மாநிலப் பிரிவுகள் மத்ரித்தின் சட்டங்களை அமல்படுத்தவே அமைக்கப்பட்டன. எசுப்பானியா மெதுவாக மக்களாட்சி முறைமைக்கு மாறியநேரத்தில் 1978இல் 17 தன்னாட்சி அமைப்புகள் மறும் இரு தன்னாட்சி நகரங்கள் நிறுவப்பட்டமையால் மாநிலங்களின் செல்வாக்கு குறைந்துள்ளது. இருப்பினும் இவை தேசியத் தேர்தல் தொகுதிகளாகவும் புவியியல் அடையாளங்களாகவும் விளங்குகின்றன.

எசுப்பானியாவின் மாநிலங்களைக் காட்டும் நிலப்படம்.

பெரும்பாலான மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்களை அல்லது முதன்மை நகரங்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றன; விலக்காக ஆலவா/அரபா, அசுதுரியாசு, பிசுகையா/விசுகயா, கன்டப்ரியா,ஜிபுசுகோவா, இல்லெசு பேலீரெசு, லா ரியோயா, லாசு பால்மாசு, நஃபரோயா/நவர்ரா மாநிலங்கள் உள்ளன.

ஏழு தன்னாட்சி அமைப்புக்களே ஒரு மாநிலப் பிரிவளவே உள்ளன: ஆதூரியா, பலேரிக் தீவுகள், காந்தாபிரியா, லா ரியோயா, மத்ரித், முர்சியா, மற்றும் நவர்ரா. மற்ற தன்னாட்சி அமைப்புகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் உள்ளன.

🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்