எழுத்திலக்கணம்

தமிழில் எழுத்திலக்கணம் என்பது தமிழ் மொழியில் பயன்படும் எழுத்துகள் தொடர்பான இலக்கணம் ஆகும். பொதுவாக எழுத்துகள் தொடர்பான விவரங்கள், தனித்தனியான ஒவ்வொரு எழுத்தையும் பற்றிய விவரங்கள், சொல்லில் எழுத்துகள் பயன்படும் முறை, சொற்கள் இணையும்போது எழுத்துகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்பன எழுத்திலக்கணம் கையாளும் விடயங்களாக அமைகின்றன.

இலக்கண நூல்களும் எழுத்திலக்கணமும்

தொகு

தமிழில் இன்று கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் மூன்று பெரும்பிரிவுகளில் ஒன்றான எழுத்ததிகாரத்தில் எழுத்தின் இலக்கணம் கூறுகிறது. இதுபோலவே பின்வந்த இலக்கண நூல்களும் எழுத்திலக்கணம் கூறுவதற்குத் தனியான பெரும்பிரிவு ஒன்றை ஒதுக்கியுள்ளன. எனினும், எழுத்திலக்கணத்தை வகை பிரித்துக் கூறும் முறையில் உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் தலைப்புகள் என்பன இலக்கண நூல்களிடையே வேறுபட்டுக் காணப்படுகின்றன.

எழுத்திலக்கணப் பிரிவுகள்

தொகு

தொல்காப்பியம் அதன் எழுத்ததிகாரத்தை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரித்து எழுத்திலக்கணம் கூறுகிறது. நன்னூல் எழுத்திலக்கணத்தைப் பன்னிரண்டு வகையாகப் பிரித்து அவற்றை 5 இயல்களில் விளக்குகிறது. இவை இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய வீரசோழியம், நேமிநாதம் ஆகிய நூல்கள் எழுத்திலக்கணத்தை எவ்வித உட்பிரிவுகளும் இன்றி ஒரே இயலில் கூறியுள்ளன. இவ்வாறு தொல்காப்பிய எழுத்திலக்கணத்தில் சொல்லப்படுபவற்றை எழுத்தியல், பிறப்பியல், புணரியல் எனும் மூன்று பிரிவுகளுள் அடக்கலாம் என்று செ. வை. சண்முகம் கூறுகின்றார்[1]. நன்னூலின் எழுத்திலக்கண இயல்கள் எழுத்தியல், பதவியல், புணரியல் எனும் மூன்று பிரிவுகளுக்குள் அடங்கும். இவ்வாறு பொதுமைப்படுத்திய பிரிவுகளுள் பல்வேறு நூல்கள் கூறும் எழுத்திலக்கணம் அடங்கும் முறையைக் கீழ்க்காணும் அட்டவணை காட்டுகிறது.

பிரிவுதொல்காப்பியம்நன்னூல்தொன்னூல் விளக்கம்
எழுத்தியல்1. நூன்மரபு,
2. மொழிமரபு
1. எழுத்தியல்2. வகுப்பு
பிறப்பியல்3. பிறப்பியல்1. தோற்றம்
பதவியல்--2. பதவியல்--
புணரியல்4. புணரியல்,
5. தொகைமரபு,
6. உருபியல்,
7. உயிர்மயங்கியல்,
8. புள்ளிமயங்கியல்,
9. குற்றியலுகரப் புணரியல்
3. உயிரீற்றுப் புணரியல்,
4. மெய்யீற்றுப் புணரியல்,
5. உருபு புணரியல்
3. விகாரம்

மேற்கோள்கள்

தொகு
  1. சண்முகம் செ.வை., (2001-2ஆம் பதிப்பு), எழுத்திலக்கணக் கோட்பாடு, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ப.37
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=எழுத்திலக்கணம்&oldid=3933204" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்வெ. இராமலிங்கம் பிள்ளைபாரதிதாசன்தமிழ்ஈரோடு தமிழன்பன்பி. கக்கன்அறிவியல் தமிழ்நந்திக் கலம்பகம்திருமூலர்சூரரைப் போற்று (திரைப்படம்)காமராசர்மூன்றாம் நந்திவர்மன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகைமுத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருநாவுக்கரசு நாயனார்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesபிள்ளைத்தமிழ்குற்றாலக் குறவஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவைந்தெழுத்துஉரைநடைஐஞ்சிறு காப்பியங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருவள்ளுவர்கடையெழு வள்ளல்கள்ஐம்பூதங்கள்விநாயகர் அகவல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு