ஐஸ்வர்யா ராய் (நடிகை)

இந்திய நடிகை

ஐஸ்வர்யா ராய் (பி. நவம்பர் 1, 1973) பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

லாங்கீன்ஸ் கடிகார வெளியீட்டு விழாவில் (2007)
இயற் பெயர்ஐஸ்வர்யா ராய்
பிறப்புநவம்பர் 1, 1973 (1973-11-01) (அகவை 50)
மங்களூர், கர்நாடகா, இந்தியா
துணைவர்அபிசேக் பச்சன் (2007 - தற்போதுவரை)

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஐஸ்வர்யா கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணராஜ் மற்றும் தாயார் பிருந்தா. மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார்.

ராய் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது அங்கு ஆர்யா வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் பயின்றார்.

சொந்த வாழ்க்கை

தொகு

ஐஸ்வர்யா 1999ஆம் ஆண்டு முதல் இந்தி நடிகர் சல்மான்கானுடன் "Dating" எனப்படும் மேற்கத்திய கலாசார உறவில் இணைந்திருந்தார். இந்த நிகழ்வு இந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றது பின்னர் இந்த இணை 2001ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த இணை பிரிந்த பொழுது ராய் பல்வேறு வகையில் துன்புற்றதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன பின்னர் சல்மான்கான் இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் மறுத்துப் பேசியிருந்தார்.

2007ஆம் ஆண்டு ராய் இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை மணமுடித்தார் இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.

திரைப்பட வாழ்க்கை

தொகு

ஆரம்பகாலம் (1997-98)

தொகு

இவர் 1997 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்யபட்டார், இப்படத்தில் இவர் மோகன்லால் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். ராய் அரசியல் தலைவர் மற்றும் முன்னாள் நடிகை ஜெ. ஜெயலலிதா வேடங்களில் நடித்தார்.

இவர் நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்

தொகு
வருடம்தலைப்புமொழிகதாபாத்திரம்Notes
1997இருவர்தமிழ்புஷ்பா / கல்பனாதெலுங்கில் இட்டரு
1997அவுர் பியார்ஹோ கயாஇந்திஆஷி கபூர்
1998ஜீன்ஸ்தமிழ்மதுமிதா / வைஷ்ணவிஇந்தியில் அதே தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
1999ஆப் லாட் சாலன்இந்திபூஜா
1999ஹம் தில் தே சுகே சனம்இந்திநந்தினிபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
1999ரவோயி சந்தமாமாதெலுங்குசிறப்பு தோற்றம்
1999தாள்இந்திமன்சிபரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
தமிழில் தாளம்
2000மேளாஇந்திசம்பகழிசிறப்பு தோற்றம்
2000கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்தமிழ்மீனாக்ஷி பாலாதெலுங்கில் ப்ரியுரலு பிளிசிண்டி
2000ஜோஷ்இந்திஷிர்லி
2000ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹாய்இந்திப்ரீதி விராத்பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2000தாய் அக்ஷார் பிரேம் கேஇந்திசாஹிபா கிரேவல்
2000முஹபத்தீன்இந்திமேகாபரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2001அல்பேலாஇந்திசோனியா
2002ஹம் துமாரே ஹெய்ன் சனம்இந்திசுமன்சிறப்பு தோற்றம்
2002ஹம் கிசிசே கும் நஹிஇந்திகோமல் ரஸ்தோகி
200223 மார்ச் 1931:ஷாஹீத்இந்திசிறப்பு தோற்றம்
2002தேவ்தாஸ்இந்திபார்வதி (பாரு)பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2002சக்திஇந்திஐஸ்வர்யா ராய்சிறப்பு தோற்றம்
2003சோகர் பலிவங்காளம்பிநோதினி
2003தில் க ரிஷ்தாஇந்திதியா ஷர்மா
2003குச் நா கஹோஇந்திநம்ரதா ஸ்ரீவத்சவ்
2004ப்ரைட் & ப்ரேசுடீஸ்ஆங்கிலம்லலிதா பக்ஷிஇந்தியில் பல்லே பல்லே அம்ரிட்சர் டூ எல்.ஏ
2004காக்கிஇந்திமகாலட்சுமி
2004க்யூன்..! ஹோகயா நாஇந்திதியா மல்ஹோத்ரா
2004ரெயின்கோட்இந்திநீரஜாபரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2005சப்த்இந்திஅந்தரா வஷிஸ்ட்/தமன்னா
2005பியூட்டி அவுர் பப்ளீஇந்திசிறப்பு தோற்றம்
2005தி மிஸ்ட்ரஸ் ஆஃப் ஸ்பீசிஸ்ஆங்கிலம்திலோ
2006உம்ராவ் ஜான்இந்திஉம்ராவ் ஜான்
2006தூம் 2இந்திசுநேஹ்ரிபரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2007குருஇந்திசுஜாதாபரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
தமிழில் குரு மற்றும் தெலுங்கில் குரு காந்த்
2007ப்ரவோக்ட்ஆங்கிலம்கிரண்ஜித் அலுவாலியாஇந்தியில் ப்ரவோக்ட்
2007தி லாஸ்ட் லிஜின்ஆங்கிலம்மீரா
2008ஜோதா அக்பர்இந்திஜோதா பாய்பரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
தமிழ் மற்றும் தெலுங்கில் அதே தலைப்பில் வெளிவந்தது
2008சர்கார் ராஜ்இந்திஅனிதா ராஜன்
2009தி பிங்க் பாந்தர் 2ஆங்கிலம்சோனியா சொலன்ட்ராஸ்பிரெஞ்ச் மொழியில் La Pantera Rosa 2
2010ராவண்இந்திராகினி ஷர்மா
2010ராவணன்தமிழ்ராகினி சுப்ரமணியம்தெலுங்கில் வில்லன்
2010எந்திரன்தமிழ்சனாதெலுங்கில் ரோபோ இந்தியில் ரோபோட்
2010ஆக்சன் ரீப்ளேஇந்திமாலா
2010குஜாரிஷ்இந்திசோபியா டிசௌஸாபரிந்துரைப்பு-பிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது
2012லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்இந்தி
2012ஹீரோயின்இந்திமகி கண்ணா

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐஸ்வர்யா_ராய்_(நடிகை)&oldid=3946472" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்ஈ. வெ. இராமசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிகி. வா. ஜகந்நாதன்பாரதிதாசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்நகராக்கம் அடிப்படையில் நாடுகள்அவதாரம்கால் சட்டைமணியன் (இதழாளர்)அசுவத்தாமன்திருக்குறள்திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்விராட் கோலிசிலப்பதிகாரம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐம்பூதங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பதினெண் கீழ்க்கணக்குமேலவளவு படுகொலைகள்திருவள்ளுவர்ரோகித் சர்மாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஹர்திக் பாண்டியாமீரா நந்தன்எட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்அம்பேத்கர்கடையெழு வள்ளல்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைமரபுச்சொற்கள்கல்கி (அவதாரம்)