கென் பாரிங்டன்

கென் பாரிங்டன் (Ken Barrington , பிறப்பு: நவம்பர் 24 1930, இறப்பு: மார்ச்சு 14 1981) இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 82 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 533 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1955 - 1968 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

கென் பாரிங்டன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கென் பாரிங்டன்
பட்டப்பெயர்கென்
உயரம்5 அடி 9 அங் (1.75 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 380)சூன் 9 1955 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுசூலை 30 1968 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுமுதல்ஏ-தர
ஆட்டங்கள்8253314
ஓட்டங்கள்680631,714399
மட்டையாட்ட சராசரி58.6745.6333.25
100கள்/50கள்20/3576/171–/3
அதியுயர் ஓட்டம்25625670*
வீசிய பந்துகள்2,71517,924108
வீழ்த்தல்கள்292734
பந்துவீச்சு சராசரி44.8232.6133.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
8
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு3/47/403/41
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
58/–514/–5/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சூலை 18 2009

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

பாரிங்டன் நவமபர் 24, 1930 இல் பிறந்தார். இவரின் தாய் கென் பாரிங்டன் பெர்சி மற்றும் தந்தை வினிஃப்ரெட் பாரிங்டன் ஆகியோரின் மூத்த குழந்தையாக பிறந்த இவருக்கு ராய் மற்றும் கொலின் ஆகிய இரண்டு சகோதரர்கள், ,மற்றும் ஷீலா எனும் ஓர் இளைய சகோதரி இருந்தனர். இவரது தந்தை பிரித்தானிய ராணுவத்தில் சிப்பாயாக 28 ஆண்டுகள் பணியாற்றினார், இவர் 24 பேர் ராயல் பெர்க்ஷயர் ரெஜிமென்ட் எனும் குழுவில் பணியாற்றினார் .இவர்கள் முதலில் பாராக்ஸில் வளர்ந்தனர் .1930 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் பொருளியல் மந்தநிலையின் போது எசுபார்த்தாவில் இவர்கள் வாழ்ந்தனர். பெர்சி இரண்டாம் உலகப் போரில் ப்ரோக் பாராக்ஸில் தங்கியிருந்தார், 1947 இல் இராணுவத்தை விட்டு வெளியேறி, ஹேண்ட்லி பேஜின் காவலாளியாக பணிபுரிந்தார்.

திருமணம்

தொகு

கென் பாரிங்டன் தனது வருங்கால மனைவி ஆன் கோசென்ஸை 1952 ஆம் ஆண்டில் சந்தித்தார். இவர் உள்ளூர் கல்வித் துறையின் செயலாளராக இருந்தார். இவர்கள் மார்ச் 6, 1954 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினர் 27 ஆண்டு காலம் இணைந்து வாழ்ந்தனர். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகள் சரிவர கிடைக்காததால், பாரிங்டன் வழக்குரைஞர்களின் நிறுவங்கள் ,வாசனை திரவியங்கள் மற்றும் தரைவிரிப்புகளை விற்கும் வேலையில் பணியாற்றினார். இவர்கள் முதலில் ஆனி பெற்றோருடன் வசித்து வந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டில் ஓவலுக்கு அருகிலுள்ள சர்ரேயில் உள்ள மிட்சாமில் தங்களுக்கென்று ஒரு சொந்த வீட்டை வாங்கினர், அங்கு இவர் ஒரு கணக்காளர்களுடனும், ஒரு பயண முகவர்களிடமும் வேலை பார்த்தார். [1]

துடுப்பாட்ட வாழ்க்கை

தொகு

இந்தியா மற்றும் பாக்கித்தான்

தொகு

குளிர்கால ஓய்வுக்குப் பிறகு, பாரிங்டன் 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டிகளில் 26, 62, 63, 95, 41, 60, 82, 14, 84, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் எடுத்தார். 1773 ஆம் ஆண்டு விளையாட்டு மைதானங்கள் ஈரப்பதமாக இருந்ததனால் மட்டையாளர்கள் ஓட்டங்கள் எடுப்பதற்கு சிரமப்பட்ட வேளையில் இவர் 32 ஓட்டங்களை எடுத்தார். பின்னர் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அதற்கான இங்கிலாந்தின் சர்ரே துடுப்பாட்ட அணியின் தலைவராக இவர் பொறுப்பேற்றார். பின்னர் ஹெடிங்லே துடுப்பாட்டத் திடலில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இங்கிலாந்து தேசியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார்.

1966 ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதித் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பிரையன் குளோஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பின்னர் இவர்கள் மட்டையாடினர். பாரிங்டன் 93 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஒரு கேட்சில் இருந்து தப்பித்தார்.பின்னர் அந்தப் போட்டியில் 139 ஓட்டங்களை எடுத்தார். பாய்காட் காயம் காரணமாக வெளியேறியதால் இவர் ஜான் என்ரிச்சுடன் துவக்க வீரராகக் களம் இறங்கி 46 ஓட்டங்கள் எடுத்தார்..இந்தப் போட்டியில்ம் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வென்றது.

சான்றுகள்

தொகு
  1. pp. 18–22, Peel
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கென்_பாரிங்டன்&oldid=3006977" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: