சாந்தி (திரைப்படம்)

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சாந்தி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த, இத்திரைப்படம் ஏ. பீம்சிங் இயக்கத்தில் ஏ. எல். சீனிவாசன் தயாரிப்பில் உருவான திரைப்படமாகும்.

சாந்தி
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஏ. எல். சீனிவாசன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
எஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுஏப்ரல் 22, 1965
நீளம்4272 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

சிவாஜியும், எஸ். எஸ். ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ். எஸ். ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதாக கருதப்படுகிறார். எஸ். எஸ். ராஜேந்திரன் இறந்துவிட்டதாக கருதிவிட்ட சிவாஜி அதை எஸ். எஸ். ராஜேந்திரனின் மாமனாரிடம் சொல்லும்போது அந்த அதிரிச்சியில் அவர் இறந்துவிடுகிறார். எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரியும் இறந்து விடுவார் என அஞ்சிய, சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும்பிய பிறகு இறந்ததாக கருதபட்ட எஸ். எஸ். ராஜேந்திரன் வந்து நிற்பார். இதனால் ஏற்படும் சிக்கல்களும், சங்கடங்களுமே அதன் முடிவுமே படத்தின் பிற்பகுதியாகும்.

வெளியீடு

தொகு

கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்ததால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன் படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

பாடல்கள்

தொகு

இத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[1]

எண்பாடல்பாடலாசிரியர்பாடகர்(கள்)நீளம் (நி: நொ)
1"யார் அந்த நிலவு"கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன்04:30
2"நெஞ்சத்திலே நீ"பி. சுசீலா03:24
3"ஊரெங்கும் மாப்பிள்ளை"பி. சுசீலா04:21
4"செந்தூர் முருகன்"பி. சுசீலா03:38
5"செந்தூர் முருகன் 2"பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா04:55
6"வாழ்ந்து பார்க்க வேண்டும்"டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்03:53

மேற்கோள்கள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சாந்தி_(திரைப்படம்)&oldid=3958985" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: வார்ப்புரு:Ntsவிக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பி. எச். அப்துல் ஹமீட்வார்ப்புரு:Refnசிறப்பு:Searchவார்ப்புரு:·முதற் பக்கம்காமராசர்வார்ப்புரு:Ntshவிநாயகர் அகவல்சுப்பிரமணிய பாரதிபோதைப்பொருள்பாரதிதாசன்தமிழ்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்மணிமேகலை (காப்பியம்)ஆழ்வார்கள்விருத்தம்திருக்குறள்சுட்டெழுத்துதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தக்காணப் பீடபூமிதமிழர் நிலத்திணைகள்ஐம்பெருங் காப்பியங்கள்மொழியிறுதி எழுத்துக்கள்வழக்கு (இலக்கணம்)இரட்டைக்கிளவிஅரிக்கமேடுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாமண்டூர்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குகண்ணதாசன்நெருக்கடி நிலை (இந்தியா)பெண் தமிழ்ப் பெயர்கள்உதவி:IPA/Englishசெப்பலோசை