சோவியத் குழுவுள்ள நிலா நிகழ்ச்சிநிரல்கள்

சோவியத் குழுவுள்ள நிலா நிகழ்ச்சிநிரல்கள் (Soviet crewed lunar programs) என்பது அமெரிக்க அப்பல்லோ திட்டத்துடன் போட்டியிட்டு நிலாவில் மனிதர்களை தரையிறக்க சோவியத் யூனியன் பின்பற்றிய தொடர்ச்சியான திட்டங்களாகும். சோவியத் அரசாங்கம் அத்தகைய போட்டியில் பங்கேற்க மறுத்தது , ஆனால் 1960 களில் இரண்டு திட்டங்களை கமுக்கமாகப் பின்பற்றியது. சோயுஸ் 7 கே - எல் 1 (புரோட்டான் - கே ராக்கெட் மூலம் தொடங்கப்பட்ட சோண்ட் விண்கலம்) மற்றும் சோயுஸ் 8 கே - லோக் மற்றும் எல் கே விண்கலத்தைப் பயன்படுத்தி நிலாத் தரையிறக்கம் N1 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. 1968 டிசம்பர் 24 - 25 அன்று முதல் குழு நிலா வட்டணையின் இரட்டை அமெரிக்க வெற்றிகளைத் தொடர்ந்து (அபோலோ 8) மற்றும் ஜூலை 20,1969 அன்று முதல் நிலவு தரையிறக்கம் (அபோலோ 11) , தொடர்ச்சியான பேரழிவு N1 தோல்விகளால் இரண்டு சோவியத் திட்டங்களும் இறுதியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. புரோட்டான் அடிப்படையிலான சோண்ட் திட்டம் 1970 இல் நீக்கம் செய்யப்பட்டது. N1 - L3 திட்டம் 1974 இல் நடைமுறையில் நிறுத்தப்பட்டது. இது 1976 இல் அதிகாரப்பூர்வமாக நீக்கம் செய்யப்பட்டது. சோவியத் விண்வெளி வீரர்கள் ஒருபோதும் நிலாவைச் சுற்றி வரவோ அல்லது தரையிறங்கவோ இல்லை. இரண்டு சோவியத் திட்டங்களின் விவரங்களும் 1990 வரை கமுக்கமாகவே வைக்கப்பட்டிருந்தன , பின்னர் சோவியத் அரசு அவற்றைத் திறந்த அணுகுமுறைக்(கிளாஸ்னோஸ்த்) கொள்கையின் கீழ் வெளியிட இசைந்தது.

காட்சிமேடை

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்