தியோடர் வான் கார்மன்

தியோடர் வான் கார்மான் (தோடர் கார்மான், தியோடர் வான் கார்மன், அங்கேரியம்: Szőllőskislaki Kármán Tódor, ஆங்கில மொழி: Theodore von karman மே 11, 1881 – மே 6, 1963) ஹங்கேரியில் பிறந்த வானியல், இயற்பியல் மற்றும் விண்வெளித் துறை அறிஞராவார். வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளராக அறியப்படுகின்றார். இவருடையப் பெயரினை வளிமண்டலத்தின் எல்லைக்கு வைத்து கார்மான் கோடு என்றழைக்கின்றனர்.[2]

தியோடர் வான் கார்மான்
பிறப்பு(1881-05-11)மே 11, 1881
புடாபெஸ்ட், ஹங்கேரி
இறப்புமே 6, 1963(1963-05-06) (அகவை 81)
ஆஃகன், ஜெர்மனி
தேசியம்ஹங்கேரியர்
அமெரிக்கர்
துறைவான்வெளிப் பொறியியல்
கல்வி கற்ற இடங்கள்புடாபெஸ்ட் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்லுட்விக் பிராண்டில்
அறியப்படுவதுமீயொலிவேக மற்றும் அதிமீயொலிவேக காற்றோட்ட பண்பறிவு
விருதுகள்அஇபொச (ASME) பதக்கம் (1941)
ஜான் ஃபிரிட்ஸ் பதக்கம் (1948)
ரைட் சகோதரர்கள் நினைவுக் கிண்ணம் (1954)
டேனியல் குக்கெண்ஹைம் பதக்கம் (1955)
திமோஷெண்கோ பதக்கம் (1958)
அமெரிக்க நாட்டின் அறிவியல் பதக்கம் (1962)
வில்ஹெம் எக்ஸ்னர் பதக்கம் (1962)
அரச கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினர்[1]

வாழ்க்கை

தொகு

ஹங்கேரியில் யூத குடும்பத்தில் 1881ம் ஆண்டு பிறந்தார். கல்விபயில ஜெர்மனி சென்று 1908ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். ஜெர்மனியின் யூதர்களுக்கு எதிரான அரசியல் மாற்றத்தினால் அமெரிக்க நாட்டிற்கு குடிபெயர்ந்தார். தன் வாழ்வின் இறுதிவரை மணம்புரியாத இவர் ஜெர்மனியின் ஆஃகன் நகருக்கு பயணித்திருந்த போது 1963ல் இறந்தார்.

பங்களிப்பு

தொகு

வரிச்சீர் ஓட்டம், கொந்தளிப்பு ஓட்டம், காற்றிதழ், இடைப்படலம் முதலானவற்றில் பெரும்பங்காற்றிதுடன் பாய்ம இயக்கவியல், மீள்மை, வெப்பப் பரிமாற்றம், படிகவுருவியல் போன்ற துறைகளிலும் பங்களித்துள்ளார்

கார்மான் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் உயரத்தினை முதன்முறையாகக் கணக்கிட்டார். வளிமண்டலத்தில் 100கி.மீ உயரத்தில் காற்றின் அடர்த்தி மிகக் குறைவானதாக இருக்கும். இங்கு விமானங்களால் பறக்க இயலாது என்றும், அப்படி பறக்க வேண்டுமென்றால் சுற்றுப்பாதை வேகத்தினை மீறிச் செல்ல வேண்டும் என கணக்கிட்டார்.

கார்மான் கோடு

தொகு

1950 ஆம் ஆண்டு கார்மான் வளிமண்டலத்தி்ன் உயரத்தினைக் கணக்கீடு செய்தார். விமானம் 100 கி.மீ உயத்திற்கு மேல் செல்ல சுற்றுப்பாதை வேகத்தில் செல்ல வேண்டும் என்றார். 100 கி.மீ என்ற உயரத்தினை தோராயமாக எல்லையென வகுத்தார். இதனை சர்வதேச குழு பரிந்துரை செய்தது. இந்த கோடானது வளிமண்டலத்திற்கும், விண்வெளிக்கும் இடையேயான கோடாக கருதப்படுகிறது.[3]

சிறப்பு

தொகு
  • 1960ம் ஆண்டு முதல் அமெரிக்க குடிசார் பொறியியலாளர்கள் சமூகத்தினரால் தியோடர் வான் கார்மான் பெயரில் பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
  • செவ்வாயிலும் நிலவிலும் உள்ள விண்கல் வீழ் பள்ளங்களுக்கு தியோடர் வான் கார்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

சான்றுகளும் மேற்கோள்களும்

தொகு
  1. கோல்ட்ஸ்டைன், எஸ். (1966). "தியோடர் வான் கார்மன் 1881-1963 (ஆங்கிலத்தில்)". அரச கழக கூட்டாளர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் (ஆங்கிலத்தில்) 12: 334–326. doi:10.1098/rsbm.1966.0016. 
  2. ஓசோன் படலத்தில் ஓட்டை - ஏற்காடு இளங்கோ பக்கம் 23
  3. ஓசோன் படலத்தில் ஓட்டை - ஏற்காடு இளங்கோ பக்கம் 24
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்