நேர் விலகு

நேர் விலகு (leg break) துடுப்பாட்டத்தில் கையாளப்படும் பந்து வீச்சுகளில் ஓர் வகையாகும். இது ஓர் வலது கை நேர்ச்சுழல் பந்துவீச்சாளரின் தாக்கு வீச்சாகும்.[1]

நேர் விலகு வீச்சை விளக்கும் மாதிரி இயங்குபடம்

துடுப்பாட்டப் பந்தின் தையல்கோட்டின் மீது அனைத்து விரல்களும் இருக்குமாறு உள்ளங்கையில் வைத்துக்கொண்டு வீசுகையில் மணிக்கட்டையினைச் சுழற்றி வீசுவதால் நேர் விலகு நிகழ்கிறது. பந்தை வீசும்போது ஓர் வலதுகை வீச்சாளரின் மணிக்கட்டிலிருந்து கொடுக்கப்படும் சுழற்சி தையல்கோட்டின் மேலுள்ள விரல்களைத் தழுவி சுட்டுவிரலையொட்டி வெளிப்படும்போது இடதுபுறமாக சுழல் கொடுக்கப்படுகிறது. பந்து வீசுகளத்தில் பட்டெழும்பும்போது இந்தச் சுழல், பந்தை நேர்கோட்டிலிருந்து, வீச்சாளரின் பார்வையில், இடதுபுறம் விலகச்செய்கிறது. ஓர் மட்டையாளரின் பார்வையில் பந்து ஓர் வலக்கை மட்டையாளரின் வலப்புறமாக நேர்ப்பக்கத்தில் இருந்து விலகிச் செல்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Science of Spin Bowling: Basics of a Leg Break". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 June 2019.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=நேர்_விலகு&oldid=2879061" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்திருக்குறள்சிறப்பு:RecentChangesபாரதிதாசன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிலப்பதிகாரம்விநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கேசவ் மகராச்அறுபடைவீடுகள்கல்கி (அவதாரம்)எட்டுத்தொகைதமிழ்த்தாய் வாழ்த்துவிராட் கோலிகென்சிங்டன் ஓவல் அரங்கம்திருவள்ளுவர்தொல்காப்பியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகார்லசு புச்திமோன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மகாபாரதம்அம்பேத்கர்பதினெண் கீழ்க்கணக்குமுருகன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கண்ணதாசன்விஜய் (நடிகர்)ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்வ. உ. சிதம்பரம்பிள்ளை