பட்டுப்பூச்சி

பட்டுப்பூச்சி என்பது வேளாண்மைப் பயன்ப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பட்டுப்பூச்சி.

பட்டுப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியானது 6-8 வாரங்களில் முடிவடைந்துவிடும். இப்பூச்சியை அந்துப்பூச்சி என்றும் அழைப்பார்கள்.

உடல் அமைப்பு

தொகு

பட்டுப்பூச்சி வெளிறிய நிறத்தில், சுமார் 2.5. செ.மீ நீளத்திலும் ,மிகவும் சோர்வாகவும் காணப்படும். அவற்றின் உடல்பாகம் நல்ல தடிமனாகவும், இறக்கைகள் பலவீனமாகவும் இருப்பதால் இவற்றால் பறக்கமுடிவதில்லை.

வளர்ச்சி நிலைகள்

தொகு

ஒரு பெண் பட்டுப்பூச்சி 300-400 வரை பழுப்பு கலந்த வெண்மை நிற, கோள வடிவிலான முட்டைகளை குவியலாக இடும். அதன் பிறகு இப்பூச்சிகள் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கும்.[1] முட்டைகளில் இருந்து 8-12 நாட்களில் சுமார் 3 மி.மீ. நீளமுள்ள, கருமை நிறம் கொண்ட இளம் புழுக்கள் வெளிவரும். அவை வளர்ச்சியடையும் போது 4 முறை தோல் உரிக்கும்.முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் சுமார் 5 செ.மீ. நீளத்திலும், உருளை வடிவத்திலும், மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும் காணப்படும். புழுப்பருவம் 30-40 நாட்கள் வரை நீடிக்கும்.[2] முழு வளர்ச்சியடைந்த புழு தொடர்ச்சியான ஒரே பட்டு நூல் இழையினால் நீள்வட்ட வடிவில் கூடு கட்டி அதனுள் கூட்டுப்புழுவாக மாறும். கூடு கட்டி முடிக்க 1 அல்லது 2 நாட்கள் ஆகும். குக்கூன் என்று அழைக்கப்படும் கூடு வெண்மை நிறத்தில் இருக்கும். கூட்டுப்புழுவில் இருந்து 10-12 நாட்களில் பட்டுப்பூச்சி வெளிவரும். பட்டுப்பூச்சியின் வாழ்க்கை 6-8 வாரங்களில் முடிவடைந்து விடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பட்டுப்பூச்சி&oldid=3850640" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்அசோகர்பாரதிதாசன்அசுவத்தாமன்பெண் தமிழ்ப் பெயர்கள்சிலப்பதிகாரம்அறுபடைவீடுகள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்எட்டுத்தொகைவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:RecentChangesபதினெண் கீழ்க்கணக்குவீமன்தமிழக வெற்றிக் கழகம்தமிழ்நாடுதொல்காப்பியம்தமிழ்த்தாய் வாழ்த்துகல்கி (அவதாரம்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்குருச்சேத்திரப் போர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்செம்மொழிசூன் 28அம்பேத்கர்விஜய் (நடிகர்)திருவள்ளுவர்ஆண் தமிழ்ப் பெயர்கள்மகாபாரதம்கார்லசு புச்திமோன்கர்ணன் (மகாபாரதம்)முருகன்