மென் டென்னிசு

மென் டென்னிசு (Soft tennis) வழமையான டென்னிசு போலவே ஓர் வலைத்தடுப்பால் இரண்டாக பிரிக்கப்பட்ட ஆடுகளத்தில் கைமட்டைகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டாகும். இதிலும் ஒற்றையராகவோ இரட்டையராகவோ ஆட இயலும். இதில் விளையாடப்படும் பந்து டென்னிசின் கடின மஞ்சள் பந்துகளைப் போலன்றி மென்மையான மீள்மத்தினால் ஆனவை.[1] இந்த விளையாட்டின் நோக்கம் வலைக்கு மேலாக அடுத்த பாதி ஆடுகளத்தின் எல்லைகளுக்குள்ளும் எதிராளியை திரும்ப அடிக்க விடாதவாறும் பந்தை அடிப்பதாகும். இந்த விளையாட்டு முதன்மையாக ஆசிய நாடுகளில், குறிப்பாக ஜப்பான், சீனக் குடியரசு, தென் கொரியா, தாய்லாந்து, பிலிப்பீன்சில் ஆடப்படுகிறது. 2004இல் மென் டென்னிசு ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பெல்ஜியம், நெதர்லாந்து, போலந்து, அங்கேரி, செக் குடியரசு, ஐக்கிய இராச்சியம், மற்றும் இந்தியாவில் இந்த விளையாட்டிற்கான சங்கங்கள் உருவாகியுள்ளன.இவை அனைத்தும் ஐரோப்பிய மென் டென்னிசு கூட்டமைப்பு மற்றும் பன்னாட்டு மென் டென்னிசு கூட்டமைப்புக்களில் உறுப்பினராக உள்ளன.

மென் டென்னிசிற்கான ஒலிம்பிக் வரைபடத்தை ஒட்டிய கோட்டோவியம்

வரலாறு

தொகு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சப்பானில் மேற்கத்திய பாதிரிகளால் டென்னிசு அறிமுகப்படுத்தப்பட்டது. தரமான டென்னிசுப் பந்துகளின் இறக்குமதி மிகுந்த செலவானதாலும் உள்ளூரில் தயாரிக்க இயலாமையாலும் தங்களுக்கேற்ற வகையில் கைமட்டையையும் பந்தையும் வடிவமைத்துக் கொண்டு சப்பானியர்கள் ஆடத் தொடங்கினர். இது soft tennis (ソフトテニス sofutotenisu?) என அழைக்கப்பட்டது.

மென் டென்னிசு ஆடுகளத்தின் அளவைகள்

தொகு
மென் டென்னிசு ஆடுகளத்தின் அளவைகள்
கோட்டின் பெயர்கோட்டின் நீளம்
ஒற்றையருக்கான அடித்தளக் கோடு8.23 மீ
இரட்டையருக்கான அடித்தளக் கோடு10.97 மீ
ஒற்றையருக்கான பக்கவாட்டுக் கோடு23.77 மீ
இரட்டையருக்கான பக்கவாட்டுக் கோடு23.77 மீ
துவக்க அடிக் கோடு6.40 மீ
துவக்க அடிக்கான பக்கவாட்டுக் கோடு12.80 மீ
நடுவண் துவக்க அடிக் கோடு12.80 மீ
நடுவண் குறி0.15 மீ
வலைத்தடுப்பு12.65 மீ

மேற்சான்றுகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மென்_டென்னிசு&oldid=3501733" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்ஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்மு. கருணாநிதிதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தேவாரம்ஆட்சி மொழிஅசுவத்தாமன்ஆட்சித் தமிழ்ஊமை விழிகள் (1986 திரைப்படம்)இரா. சம்பந்தன்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்எட்டுத்தொகைஅப்பூதியடிகள் நாயனார்இரட்சணிய யாத்திரிகம்ஆண்டாள்அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்த்தாய் வாழ்த்துதிருவள்ளுவர்பிள்ளைத்தமிழ்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடுவிநாயகர் அகவல்ஐஞ்சிறு காப்பியங்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைபதினெண் கீழ்க்கணக்குசூலை 2மணிமேகலை (காப்பியம்)அவதாரம்