லெக்கார்ன் கோழி

லெக்கார்ன் கோழி ( Leghorn இத்தாலிய மொழி: Livorno or Livornese) என்பது ஒரு கோழி இனமாகும். இந்தக் கோழி இனம் நடு இத்தாலியில் தோன்றியது ஆகும். இக்கோழிகள் முதலில் 1828 ஆம் ஆண்டு வட அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அமெரிக்காவிலிருந்து 1870 ஆம் ஆண்டு பிரிட்டனில் இக்கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[1] வெள்ளை லெக்கார்ன் கோழிகளையே உலகின் பல நாடுகளில் வளர்க்கின்றனர். லெக்கார்ன் கோழிகளில் வெள்ளை லெக்கார்ன் தவிர்த்து வேறுபல வகைகள் இருந்தாலும் அவை குறைவான அளவே உள்ளன.

லெக்கார்ன் கோழி மற்றும் சேவல்

விளக்கம்

தொகு

வெள்ளை லெக்கார்ன் கோழிகளின் கால்கள் வெளிரிய மஞ்சள் நிறத்திலும், குறுகலாகவும், கனத்தும் இருக்கும். இவற்றின் கால் விரல்களும் குறுகியவை. இதனால் இக்கோழிகளால் சரிவர நடக்க இயலாது. கனத்த தேகம் உள்ளவர்கள் போல காலை அகட்டி வைத்து அசைந்து அசைந்து நடக்கும். இவற்றின் கொண்டை இரத்த சிவப்பு நிறமுடையதாக இருக்கும். இவற்றின் உடல் முழுவதும் வெள்ளை நிற பளபளக்கும் இறகுகள் அடர்ந்திருக்கும். இக்கோழிகள் ஆண்டுக்கு சராசரியாக 280 முட்டைகள் வரை இடும் சிலசமயம் 300–320 வரை கூடுதலாகவும் முட்டை இடும். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Standards". http://www.theleghornclub.com/standards.htm. Archived from the original on 2017-03-03. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  2. "Livorno Atlante delle razze di Polli - Razze italiane". கட்டுரை. http://www.agraria.org/polli/livorno.htm. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=லெக்கார்ன்_கோழி&oldid=3570306" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்சுப்பிரமணிய பாரதிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்திருக்குறள்சிறப்பு:RecentChangesபாரதிதாசன்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிலப்பதிகாரம்விநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கேசவ் மகராச்அறுபடைவீடுகள்கல்கி (அவதாரம்)எட்டுத்தொகைதமிழ்த்தாய் வாழ்த்துவிராட் கோலிகென்சிங்டன் ஓவல் அரங்கம்திருவள்ளுவர்தொல்காப்பியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகார்லசு புச்திமோன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மகாபாரதம்அம்பேத்கர்பதினெண் கீழ்க்கணக்குமுருகன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கண்ணதாசன்விஜய் (நடிகர்)ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்வ. உ. சிதம்பரம்பிள்ளை