வசிட்டர்

வசிட்டர் (वसिष्ठ, வசிஷ்டர்) பிரம்ம ரிஷி ஏழு புகழ்பெற்ற சப்தரிசிகளுள் ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் இருக்கு வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33 இல், பத்து அரசர்களின் மாபெரும்போர் என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இதுவே என்பர்.

இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்கிதை (Vasishta Samhita). இவரது மனையாளின் பெயர் அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி, இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் கௌசிகர் இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் பிரம்ம இருடி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார்.[1]

இராமாயண காவியத்தில்

தொகு

இராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், தசரதனின் அரச குருவாக விளங்கியவர். விசுவாமித்திரரின் வேண்டுகோளின் படி, இராமன் மற்றும் இலக்குமணணை விசுவாமித்திரருடன் வனத்திற்குச் செல்ல வசிஷ்டர் தசரதனுக்கு ஆலோசனை கூறினார்.

மகாபார காவியத்தில்

தொகு

மகாபாரத காவியத்தில், வசிட்டரின் மகனாக சக்தி மகரிஷி அறியப்படுகிறார்.[2] தன் மகன் சக்தியைக் கொன்ற இச்வாகு குல மன்னர் கல்மாஷபாதனுக்கு வசிட்டர் புத்திரபேறு வழங்கியவர்.[3]

புராணங்களில்

தொகு

வசிட்டரின் பெயர் அனைத்து புராணங்களிலும் அறியப்படுகிறது.

மேற்சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இராமாயணம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=வசிட்டர்&oldid=3763162" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்சிறப்பு:Searchகாமராசர்முதற் பக்கம்குமரிக்கண்டம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்போதைப்பொருள்கழஞ்சுஇந்திய அரசியலமைப்புதிருக்குறள்எட்டுத்தொகைபல்லவர்ம. பொ. சிவஞானம்ஐம்பெருங் காப்பியங்கள்ஓம் பிர்லாசிலப்பதிகாரம்பி. எச். அப்துல் ஹமீட்நீதிக் கட்சிசட்டம்சோழர்கால ஆட்சிபட்டினப் பாலைபதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு (நூல்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நிர்வாகச் சட்டம்இந்தியப் பிரதமர்மணிமேகலை (காப்பியம்)கியூ 4 இயக்கு தளம்இந்தியன் (1996 திரைப்படம்)கடைச்சங்கம்கடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்சோழர்